சன் பிக்சர்ஸின் அறிவிப்பு!

Filed under: சினிமா |

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 169 திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை நாளை வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாளை காலை 11 மணிக்கு முக்கி அப்டேட் ஒன்றை வெளியிட போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனையடுத்து தலைவர் 169 திரைப்படத்தின் அப்டேட்தான் நாளை வெளிவரும் என்றும் குறிப்பாக சிவராஜ்குமார் இந்த படத்தில் இணைந்ததை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தை இயக்கவிருக்கிறார். இப்படம் நெல்சனுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று ரசிர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.