சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் நடிகை சமந்தா. ஆனால் கடந்த சில மாதங்களாக எந்தவொரு புகைப்படத்தையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் அவர் தோல் சம்மந்தமான அலர்ஜியால் பாதிக்கப்பட்டார். அதனால்தான் அவர் புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை என்று வதந்திகள் கிளம்பின.
சில தினங்களுக்கு முன்னர் பதிவிட்ட அவர் மையோசிட்டிஸ் என்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு பிரச்சனையில் இருப்பதாகவும், அதில் இருந்து இப்போது குணமாகி வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் அவர் சீக்கிரமாக குணமாக வேண்டுமென நம்பிக்கை வார்த்தைகளை பகிர்ந்தனர். இதையடுத்து அவர் சமீபத்தில் ரிலீசான அவரின் “யசோதா” திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் இப்போது சமந்தாவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.