15 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் காதலில் விழுந்துள்ளார். இதனால் கர்ப்பவதியான அவர் சுயபிரசவம் செய்ததால் அவருக்கு பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்ததன் விளைவாக அவர் சில மாதங்களிலேயே கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்துள்ளார். இந்நிலையில் பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு சென்றால் அனைவருக்கும் தெரிந்து விடக்கூடும் என்று பயந்ததால், அவர் யூடியூபில் பார்த்து சுயபிரசவம் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து அவர் பிரசவ தினத்தன்று தனது அறையில் கதவை மூடிக்கொண்டு சுயமாகவே பிரசவம் பார்த்து கொண்டுள்ளார். அவருக்கு குழந்தையும் பிறந்தது. இதையடுத்து குழந்தையை தன்னுடைய குடும்பத்தினர் பார்த்தால் அனைவருக்கும் உண்மை தெரிந்துவிடும் என்பதால் குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்து ஒரு பெட்டியில் வைத்து பூட்டியுள்ளார். சிறுமியின் தாய்க்கு இந்த விஷயம் தெரிய வர அவர் அதிர்ச்சி அடைந்த உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவமனையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை விசாரணை செய்து வருகின்றனர். குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு 15 வயது சிறுமி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான நபரையும் தேடி வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.