இன்று நடிகர் பிரபாஸின் “சலார்” திரைப்படத்தின் டிரெயிலர் ரிலீசாகி உள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் “சலார்.” இப்படத்தின் டீசர், டிரெயிலர் சமீபத்தில் வைரலானது. வரும் 22ம் தேதி உலகம் முழுதும் ரிலீசாகவுள்ளது. இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 55 நிமிடம் ரன்னிங் டைம் ஆகும். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரெயிலர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் பிரிதிவிராஜ் நடித்துள்ளார். அவரது உயிர் நண்பன் கதாப்பாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளதாக இந்த டிரெயிலரை பார்க்கும் போது தெரிகிறது. “சுல்தான் தனக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் தன் பலமான படைகளிடம் கூறாமல், ஒரே ஒருத்தனிடம் மட்டும் கூறினார். அவன் எல்லாவற்றையும் அவனுக்காக கொண்டு வந்தான்’’ என்ற டயலாக் கவனம் பெற்றுள்ளது. கான்சாரில் நடக்கும் யுத்தமும், ஆட்சியும் இதற்காக நடக்கும் சண்டை- இரு உயிர் நண்பர்கள் பரமவிரோதியாக மாறியுள்ள போக்கு இதுதான் படத்தின் கதை என தெரிகிறது. இந்த டிரெயிலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.