8 ஆண்டுகளுக்கு முன்பு “மௌனகுரு” திரைப்படத்திற்கு பிறகு சாந்தகுமார் இயக்கியப் படம் “மகாமுனி” மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பிருந்தது.
ஆனால் படம் ரிலிசான போது அதன் திரைக்கதை தொய்வு காரணமாக மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் ரிலிஸுக்கு பின் படக்குழு பல விருது விழாக்களுக்கு அனுப்பி வருகின்றனர். படத்தில் நடித்த ஆர்யாவுக்கு சில திரைப்பட விழாக்களில் விருதுகளும் கிடைத்தன.
இப்போது சாந்தகுமார் அடுத்து இயக்கும் படத்தில் “கைதி” புகழ் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் பூஜை கடந்தாண்டு சென்னையில் நடைபெற்று படப்பிடிப்பு நடந்து வந்தது. இத்திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் மற்றும் ஜி எம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்போது இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தை இயக்குனர் சாந்தகுமாரே தயாரித்துள்ளார்.