சார்ஜிங் பாய்ண்ட் 100 இடங்களில் அமைக்க திட்டம்!

Filed under: தமிழகம் |

தமிழக மின்வாரியம் தமிழகத்திலுள்ள 100 இடங்களில் இ&-வாகனங்களுக்கு மின்சார சார்ஜிங் பாயிண்ட் அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுதும் எலக்ட்ரிக் வாகனங்கள் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சார்ஜிங் பாயிண்ட் நிலையங்களும் அதிகரித்து வருகின்றன. அவ்வகையில் தனியார் பலர் எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை வைத்திருக்கிறது. தமிழகம் மின்வாரியமே தற்போது சார்ஜிங் நிலையங்களை வைக்க திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 100 இடங்களில் பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோடை காலம் முடிந்ததும் சார்ஜிங் பாயிண்ட் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.