ஐஎஸ் அமைப்பின் தலைவர் சிரியாவில் அமெரிக்க ஹெலிகாப்டர் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று அதிகாலை சிரியா நாட்டின் வடக்கு பகுதியில் ஐஏஎஸ் அமைப்பின் முக்கிய நபராக கருதப்படும் அந்த அமைப்பின் தலைவர் அல் ஹாஜி அலி பதுங்கி இருந்ததாக ரகசிய தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்தது. இதையடுத்து அமெரிக்க படையினர் ஹெலிகாப்டர் மூலம் சென்று அப்பகுதியில் தாக்குதல் நடத்தியதில் அவர் சுட்டு கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அமைப்பின் தலைவர் அல் ஹாஜி அலி மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பயங்கரவாத செயல்களை செய்து வந்ததாகவும் மேலும் ஒரு பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்ட நிலையில் அவர் தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. சிரியாவில் ஐஏஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



