ஒபாமா திறமையில்லாத அதிபர் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் பேச்சால் பெரும் பரபரப்பு!

Filed under: உலகம் |

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா திறமை இல்லாத அதிபர் என டொனால்ட் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.

அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டு பேசிய பாரக் ஒபாமா கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவுதலை பார்க்கும் போது அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதை காட்டி உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், இக்கட்டான தருணத்தில் அதிகாரிகள் பல பேர் தங்கள் இருக்கும் பொறுப்பை மறைந்து விட்டனர் என கடுமையாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் இதனைப்பற்றி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கேட்ட கேள்விக்கு, ஒபாமா திறமையற்ற அதிபர் வேறு எதுவும் சொல்ல முடியாது என டிரம்ப் கூறியுள்ளார்.