சிவராஜ் குமாரின் 130வது படம்!

Filed under: சினிமா |

தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார். அத்திரைப்படத்தில் அவர் வில்லன் என்று சொல்லப்படுகிறது. இத்திரைப்படம் மட்டுமில்லாமல் தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் கன்னடம் தாண்டி வெளிமொழி படங்களில் அவர் நடித்ததில்லை. இப்போது அவர் நடிப்பில் கன்னடா மற்றும் தமிழில் உருவாகும் சிவராஜின் 130வது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை “ஈட்டி” திரைப்படத்தை இயக்கிய ரவி அரசு இயக்க சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.