சிவாஜி கணேசன் சிலையை மாற்ற எம்.எல்.ஏ.கோரிக்கை!

Filed under: சினிமா,தமிழகம் |

திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருவுருவச் சிலையானது நிறுவப்பட்டிருந்தது. மதுரை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி அந்த இடத்தில் இருந்து இந்த சிலையை அகற்றி அதனை வேறு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று கூறப்பட்டிருந்து.

திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எம்.எல்ஏ மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் வேறு இடத்தில் நிறுவ வேண்டும் என்று மனு அளித்தார். அப்போது மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ், காங்கிரஸ் வக்கீல் கோவிந்தராஜன், காங்கிரஸ் வக்கீல் சரவணன், திருச்சி மாநகராட்சி 2ம் மண்டல கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா, பகுதிச் செயலாளர் டிபிஎஸ்எஸ் ராஜ் முகமது, வட்டச் செயலாளர் எடிட்டன், சுரேஷ், கோவிந்தராஜ் உள்ளிட்ட சிவாஜி கணேசன் சங்க உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.