தொழிலதிபர் ஜோசப் லூயில் அடைக்கலராஜை, திருச்சி வேட்பாளராக அறிவிக்க வேண்டும். திமுக அமைச்சரிடம்  காங்கிரசார் கோரிக்கை மனு.

Filed under: தமிழகம் |

தொழிலதிபர் ஜோசப் லூயில் அடைக்கலராஜை, திருச்சி வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.

திமுக அமைச்சரிடம்  காங்கிரசார் கோரிக்கை மனு.

முன்னாள் மறைந்த எம்.பி. அடைக்கலராஜின் மகன் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜுக்கு திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி திருச்சி காங்கிரஸார் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவை சந்தித்து மனு கொடுத்தனர்.

இந்நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை பிரிவு முன்னாள் தலைவர் புத்தூர் சார்லஸ், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வில்ஸ் முத்துக்குமார் மாவட்ட செயலாளர் விக்டர், முன்னாள் கோட்டத் தலைவர்கள் ஓவியர் கஸ்பார், ஜெரால்டு,வார்டு தலைவர் நடராஜ், உறையூர் சிவா, கருமண்டபம் மரிய சூடு, ரோஜர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.