சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

Filed under: இந்தியா,தமிழகம் |

இன்று நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி உள்ளது. இதற்காக பொதுத் தேர்வு எழுத மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

இன்று முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடக்கம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் சுமார் 39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொது தேர்வை எழுதுகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. மேலும் இன்று தொடங்கும் பொது தேர்வு ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெறும் என்றும் தினமும் தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றும் அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டும் குறிப்புகள் வழங்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 10 மணிக்கு மேல் தாமதமாக வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் எனவே மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்துக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.