சீனா 11 ஏவுகணைகளை அடுத்தடுத்து தைவான் கடல்பகுதியில் வீசியுள்ளதால் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருவதால் தைவானில் கடல் பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய அதிகாரி ஒருவர் தைவான் சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து போர் பயிற்சி செய்வதாக கூறி வரும் சீனா, தைவான் கடல் பகுதியில் ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா பிரிட்டன் நாடுகள் தைவானுக்கு ஆதரவாக உள்ளதால் தென் சீன கடலில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. தற்போதுதான் உக்ரைன் நாட்டின் மீதான போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. தற்போது இன்னொரு போர் ஆரம்பித்து விடுமோ என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.