இந்திய சீன எல்லையில் சில தினங்களாக பதற்றம் அதிகமாக உள்ளது. இந்த தருணத்தில் சீனா புதிதாக கண்டுபிடித்த ஆளில்லா ஹெலிகாப்டரை எல்லையில் செயல்படுத்தியது என செய்தி கூறப்படுகிறது.
சீனாவின் விமான தயாரிப்பு நிறுவனம் ஏஆர் 500 சி என்ற ஆளில்லா ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது. இதனை கொண்டு உளவு பார்ப்பது, குண்டு வீசுவது ஆகிய செயல்களின் திறன்களை கொண்டது. இதனை கடந்த வாரத்தில் சீனா சோதனை செய்துள்ளது.
திபெத் பீடபூமி பகுதியில் இந்தியா – சீனா எல்லையில் படை வீரர்களை குவிந்ததால் பதற்றமாக உள்ளது. சீனா ஆளில்லா ஹெலிகாப்டரை கொண்டு உளவு பார்த்தது என சீனாவின் செய்தியில் வெளியானது என கூறப்படுகிறது.