சுப்ரீம் கோர்ட்டில் அதானி விவகாரம் குறித்து மத்திய அரசு தகவல்!

Filed under: இந்தியா |

இன்று சுப்ரீம் கோர்ட்டில் அதானி விவகாரம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.

அதானி குழும நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம் காட்டிய நிலையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் மோசமான சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளது. அதானி குழுமங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கையை கையாள செபிதான் சரியான அமைப்பு என்றும் முதலீட்டாளர்களின் நலனை காக்க உச்சநீதிமன்றம் குழு அமைத்தால் அதனை ஏற்றுக் கொள்கிறோம் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.