சுப்ரீம் கோர்ட் ஜம்மு காஷ்மீர் குறித்து அதிரடி தீர்ப்பு

Filed under: இந்தியா,உலகம் |

சுப்ரீம் கோர்ட் ஜம்மு காஷ்மீரின் தனி அந்தஸ்து ரத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதுகுறித்து தலைமை நீதிபதி “இந்தியாவுடன் இணைந்த பிறகு தனது முழுமையான இறையாண்மையை காஷ்மீர் இழந்து விடுகிறது, இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் காஷ்மீர் அரசியலமைப்பு, ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி இறையாண்மையோ, ஆட்சி உரிமையோ இருக்க முடியாது. சட்டப்பிரிவு 370 என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு என நாங்கள் கருதுகிறோம், 370 சட்டப்பிரிவு மாநிலத்தில் போர் நிலைமைகள் காரணமாக ஒரு இடைக்கால ஏற்பாடாக இருந்தது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிற மாநிலங்களிலிருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்றும் குடியரசு தலைவர் ஆட்சி அங்கு இருக்கும்போது மத்திய அரசு எடுக்க முடிவுகளை கேள்விக்கு உள்ளாக்க முடியாது” என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.