சுய உதவிக் குழுக்கள் மூலம் 1கோடி முகக்கவசங்கள்!

Filed under: இந்தியா |

புது டெல்லி, ஏப்ரல் 29

நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுய உதவிக் குழுக்கள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் கீழ் உள்ள தீன்தயாள் அந்யோதயா யோஜ்னா – தேசிய நகர்ப்புற வாழ்வாதரத் திட்டம் (Deendayal Antyodaya Yojana – National Urban Livelihoods Mission – DAY-NULM) என்ற முன்னோடித் திட்டத்தின் கீழ் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் சுயஉதவிக் குழுக்களின் இடைவிடாத முயற்சி, ஆக்கப்பூர்வமான சக்தி மற்றும் ஒருங்கிணைந்த தீர்மானம் ஆகியவற்றை இந்த சாதனையானது வெளிப்படுத்துகிறது.

DAY-NULM இயக்கத்தின் உதவியோடு தொழில்முனைதலில் ஈடுபட்டுள்ள பெண்களின் வலிமையான ஆற்றலை பெருமிதமான இந்தத் தருணமானது வெளிப்படுத்திக் காட்டுகிறது. மற்றவர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் கூடுதல் ஆற்றல் மற்றும் உறுதியுடன் முயற்சிகளை பலமடங்கு அதிகரிப்பதே இவர்களின் நோய் எதிர்ப்பு நடவடிக்கையின் நோக்கமாகும். உண்மையில் மக்களின் வாழ்வைப் பாதுகாப்பதில் பெண்களின் அதிகாரம் என்பது இதுவே ஆகும்.