எஸ்.பி.பி விரைவில் குணமடைந்து வர நான் பிரார்த்திக்கிறேன் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ட்வீட்!

Filed under: இந்தியா |

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய உடல்நிலை மோசமாகி விட்டது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனாவில் இருந்து குணமடைந்து வரவேண்டும் என உலகமே கடவுளிடம் பிராத்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் அவரின் ட்விட்டரில் பக்கத்தில் எஸ் பி பாலசுப்ரமணியதுக்காக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்; நீங்கள் மிகவும் போற்றப்பட்ட பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் ஜி. நீங்கள் விரைவான குணமடைந்தும் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடனும் திருப்ப நான் பிரார்த்திக்கிறேன். சமூகத்தில் கடுமையான களங்கத்தை எதிர் கொண்ட முன்கள பணியாளர்களுக்கு மன உறுதியை உயர்த்துவதற்காக வீடியோ வெளியிட்டார் எனவும் பதிவிட்டுள்ளார்.