மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு வெங்கடேசன் சென்னையில் உள்ள வங்கியில் திடீர் என உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.
வங்கித்தேர்வு பொங்கல் அன்று நடைபெற உள்ளதால் அத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு வெங்கடேசன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு உயர் அதிகாரிகள் அழைத்தனார். இந்த பேச்சு வார்த்தையில் உயர் அதிகாரிகள் பங்கேற்காததால் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து விரைவில் இந்த பேச்சுவார்த்தையில் உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.