இயக்குனர் நலன் குமாரசாமி “சூதுகவ்வும்” என்னும் திரைப்படத்தின் மூலம் பெயர் பெற்றார். இப்படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அப்படம் நடக்காமல் போனது.
டார்க் காமெடி வகையில் “சூதுகவ்வும்” தமிழ் சினிமாவில் ஒரு கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்பட்டது. அதற்கு முன் இந்த ஜானரில் வந்தது கமல்ஹாசனின் “மும்பை எக்ஸ்பிரஸ்” திரைப்படம். ஆனால் அப்படமும் வெற்றி பெறவில்லை. இப்போது 10 வருடங்கள் கழித்து “சூதுகவ்வும்“ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க தயாரிப்பாளர் சி.வி.குமார் திட்டமிட்டு வேலைகளை தொடங்கியுள்ளார். படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும், விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. “யங் மங் சங்” திரைப்படத்தின் இயக்குனர் அர்ஜுன் இப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் பாகத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் இரண்டாம் பாகத்தில் சத்யராஜை நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.