சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Filed under: அரசியல்,சினிமா |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “ஜெயிலர்.” படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இன்று ரஜினிகாந்த்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு “ஜெயிலர்” பட முக்கிய அறிவிப்பு மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் @க்ஷீணீழீவீஸீவீளீணீஸீtலீ அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் @க்ஷீணீழீவீஸீவீளீணீஸீtலீ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்’’ என கூறியுள்ளார்.