நேற்றிரவு ஆளுநர் ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிரடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவு பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு கவர்னருக்கு அமைச்சரை நீக்கும் அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த விளக்கத்தில், “கரூரில் நடந்த ஐடி சோதனையின் போது அதிகாரிகள் நடத்தப்பட்ட விதமே விசாரணை தடுப்புக்கு உதாரணம். ஐடி அதிகாரிகள் தாக்கப்பட்டதோடு, அவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்களும் பறிக்கப்பட்டன. அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் 5 பக்கங்கள் கொண்ட கடிதத்தில் நீக்கத்திற்கான காரணம்” இவ்வாறு கூறியுள்ளார்.
Related posts:
அமைச்சர் கேள்விக்கு ஜெயகுமார் பதிலடி!
கிளி சோதிடர் கைது: முட்டாள் திமுக அரசின் பழிவாங்கும் போக்குக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். அன்புமண...
புதுக்கோட்டை SP அலுவலகம் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்ற செவிலியர் நிலை தடுமாறி பலி. எம்.எல்.ஏ மு...
திருச்சியில் தெய்வ தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் பேட்டி: