சென்னை நந்தனம் அருகிலிருக்கும் கேளிக்கை விடுதியின் சுவர் திடீரென விழுந்தது. இவ்விபத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது. ஆனால் கேளிக்கை விடுதி அமைந்துள்ள பகுதியில் இருந்து 240 அடி தொலைவில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது, அதிர்வால் விபத்து நடைபெறவில்லை என்றும் மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்திருந்தது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.