வரும் ஆங்கில புத்தாண்டை சென்னையில் கொண்டாட தடைகள் விதிக்கப்படுமா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
சீனாவில் மிக அதிகமாக அளவில் கொரோனா தொற்று வைரஸ் பரவி வருகிறது. அடுத்து இந்தியாவிலும் பரவக்கூடும் என்ற காரணத்தினால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் விதித்து வருகிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் மாஸ்க் அணிதல் கட்டாயப்படுத்தி உள்ளது. தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்துள்ள பேட்டியில், “புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு என தனியாக கட்டுப்பாடு எதுவும் இல்லை, என்றாலும் தனிமனித கட்டுப்பாடு அவசியம். 2 ஆண்டுகளுக்கு முன் விதிக்கப்பட்ட மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகிய கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளவில்லை. அவை தொடர்ந்து நடைமுறையில் தான் உள்ளன. மேலும் தனிமனித கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருந்தால் நமக்கும் நல்லது நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் நல்லது” என்று அவர் கூறியுள்ளார்.