இயக்குனர் அட்லி பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் “ஜவான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கியது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இப்படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இதையடுத்து சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மற்றும் தலைப்பு ‘ஜவான்’ என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் மும்பையில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டதற்கு மும்பையில் தற்போது கடுமையான மழை பெய்வதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.