சென்னை கல்லூரி மாணவி பாலியல் தரகர் வேலை பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரகாஷ் என்பவரை காதலித்தார். பிரகாஷ் பாலியல் தரகர் வேலை பார்த்து வரும் நிலையில் அவரை காதலித்த மாணவி, பின்னர் சென்னையில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அதன் பின்னர் அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது சக தோழிகளுக்கு பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபட செய்ததாக தெரிகிறது. தனது காதலனுடன் சேர்ந்து பாலியல் தரகர் தொழில் பார்த்த கல்லூரி மாணவியை அதிரடியாக போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பாலியல் தரகர் பிரகாஷ் தலைமறைவாகி விட்டதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தரகர் வேலை பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.