கன்னியாகுமரி மாவட்டம் சித்தரங்கோடு பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் செய்தி குழுவினர் மீது மீது சமுக விரோதிகள் மிரட்டல் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் சித்தரங்கோடு பகுதியில்
செய்தி சேகரிக்க நியூஸ் தமிழ் செய்திக்குழு சென்றுள்ளது. இன்று (14-09-2022) செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செய்தியாளர் ஜெபர்சன் மற்றும் செய்திக் குழுவினரை அங்கிருந்த கும்பல் மிரட்டியுள்ளது..மேலும் அங்கிருந்து செய்திக்குழுவை அப்புறப்படுத்த முயற்சி செய்துள்ளது.இந்த நிகழ்வுகள் நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டுள்ளது.
கல்குவாரி உரிமையாளர் மற்றும் அங்குள்ளவர்கள் நியூஸ் தமிழ் செய்திக்குழுவை மிரட்டியதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.அதே நேரம் மாவட்ட காவல்துறை , மாவட்ட நிர்வாகம் இதை வெறுமனே வேடிக்கைப் பார்க்கும் போக்கும் கண்டனத்திற்குறியது.
இயற்கை வளங்களை சூறையாடும் மாஃபியா கும்பல்களை அம்பலப்படுத்தும் ஊடகங்களை மிரட்டும் போக்கு ஆரோக்கியமானதல்ல.உடனடியாகத் தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நீதியை நிலைநாட்டுவதுடன் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.