தனது அக்காவிடம் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த ஜெயசித்ரா என்ற 40 வயது பெண் காவல்துறை அதிகாரி செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அயனாவரத்தில் உள்ள தனது வீட்டில் அக்காவிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவருக்கு வாந்தி வந்ததாக தெரிகிறது. அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்ததால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவரது உயிர் பிரிந்து விட்டதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தது அதிர்ச்சி அடைந்துள்ளது. அக்காவிடம் பேசிக் கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த ஜெயசித்ராவின் முடிவு அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது