இரவு மற்றும் அதிகாலை என 2 இ-மெயில்களில் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இ-மெயிலில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொன்றாக வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விமான நிலையம் முழுவதும் ஆய்வு செய்தனர். அதன்பின் விசாரணையில் போலி மிரட்டல் என தெரியவந்தது. இ-மெயில் அனுப்பியவரை போலீசார் தேடி வருவதாகவும், ஐபி முகவரியை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் சைபர் க்ரைம் போலீசார் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே விமான நிலையம் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரமுகர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவதும் அதன்பின் அது வெறும் வதந்தி என கண்டுபிடிக்கப்படுகிறது. இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடும் நபர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.