செஸ் தினத்தில் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து!

Filed under: விளையாட்டு |

செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் தினத்தன்று தமிழ்நாட்டில் மாநில அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தனது கையெழுத்திட்ட செஸ் போர்டுகளை அன்பளிப்பாக வழங்கினார்.

தமிழ்நாடு இந்தியாவில் அதிகளவில் கிராண்ட் மாஸ்டர்களைக் கொண்ட, உலக செஸ் போட்டிகளில் பெரிதளவில் பங்குபெறும் வீரர்களை உருவாக்கும் மாநிலமாக சிறந்து விளங்குகிறது. தமிழக கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி, குகேஷ் மற்றும் பல தமிழக வீரர்களின் சாதனைகள் இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகின்றன. அவ்வகையில் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஐந்து முறை செஸ் உலக சாம்பியனும், மற்றும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவருமான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த். உலக செஸ் தினம் 2024 1924ம் ஆண்டு பாரிஸில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு நிறுவப்பட்ட தேதியைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20ம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாகவும் மாணவர்களிடையே செஸ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், மாநில அளவிலான செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு விஸ்வநாதன் ஆனந்த் தனது சொந்த முயற்சியில் செஸ் போர்டுகளை ஆட்டோகிராபுடன், அன்பளிப்பாக வழங்கினார். அன்பளிப்புடன் சேர்த்து “இந்த சர்வதேச செஸ் தினத்தில், உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது முடிவற்ற சாத்தியங்கள், கற்றல் மற்றும் சுய-கண்டுபிடிப்பு ஆகியவற்றின் பயணம். நீங்கள் கொண்டாடும் இந்த நாளில், எனது சொந்த பயணத்தின் சில தருணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்று தொடங்கி, செஸ் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பியுள்ளார்.