சொகுசு பஸ் ஒன்று தூத்துக்குடியிலிருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் வழியில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சொகுசு பஸ் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியிலிருந்து கோயம்புத்தூருக்கு நேற்று இரவு புறப்பட்டு ஒட்டாப்பிடாரம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென பஸ்ஸின் முன்புறத்திலிருந்து புகை அதிக அளவில் வெளிவரத் தொடங்கி உள்ளது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனே பஸ்ஸை நிறுத்தி பயணிகளை இறங்குமாறு கூறியுள்ளார். பீதியடைந்த பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடியுள்ளனர். உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை விரைந்து அணைத்துள்ளனர். ஆனால் பஸ் முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.