ஜப்பான் அரசின் பரிசு அறிவிப்பு!

Filed under: உலகம் |

ஜப்பான் அரசு தலைநகர் டோக்கியோவை விட்டு புறநகர் பகுதிக்கு சென்றால் ஒரு மில்லியன் பரிசு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருவதை அடுத்து நலத் திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கணக்கில் கொண்டு ஒரு குழந்தையுடன் உள்ள ஒரு குடும்பம் நகரத்தை விட்டு அல்லது கிராமத்திற்கு சென்றால் ஒரு மில்லியன் பரிசு அளிக்கப்படும் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. ஒரு மில்லியன் என்பது 6.5 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இரண்டு குழந்தைகளுடன் உள்ள குடும்ப நகரை விட்டு சென்றால் 3 மில்லியன் பரிசு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து 2025ம் ஆண்டுக்குள் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் டோக்கியோ நகரை விட்டு வெளியேற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.