ஜனவரி 13ம் தேதி ஜப்பான் பிரதமர் புமியோவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பல ஆண்டுகளாக ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடு நட்புமுறையில் இருந்து வருகிறது. அவ்வகையில் ஜப்பான் நாட்டின் மீதான நட்பை மேலும் வலியுறுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஜப்பான் நாட்டிற்கு தென்கொரியா அச்சத்தை கொடுத்து வரும் நிலையில் கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்த பேச்சுவார்த்தை உதவும் என்றும் கூறப்படுகிறது. வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஜப்பான் பிரதமர் புமியோ சந்தித்து பேசவுள்ளார். இச்சந்திப்பின்போது சர்வதேச அளவில் நிலவி வரும் பருவ நிலை மாற்றம், வடகொரியாவின் அச்சம், சீனாவில் நிலையும் நிலவும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.