தமிழக அரசு 2023ம் ஆண்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ளது
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பீட்டா சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை கடந்த சில நாள்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கால்நடை பராமரிப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எந்த தடையும் சுப்ரீம் கோர்ட் விதிக்காது என்று அவர்கள் நம்பிக்கையூட்டியுள்ளனர்.