இந்த ஐ.பி.ல் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் – பி.சி.சி.ஐ அமைப்பு பொருளாளர் உறுதி!

Filed under: விளையாட்டு |

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என பிசிசிஐ அமைப்பின் பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசன் மார்ச் மாதமே நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கள் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்க உள்ளது.

கடந்த வாரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. ஐபிஎல் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா அவரின் சொந்த காரணமாக விலகினார்.

இதை பற்றி பிசிசிஐ பொருளாளர் அருண்குமார் துமால் கூறியது; சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் இல்லை என உறுதியாகியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடக்கும். எந்த சந்தேகமும் வேண்டாம். மேலும், அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை வீரர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.