“ஜவான்” திரைப்பட ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி!

Filed under: சினிமா,சென்னை |

தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

செப்டம்பர் 7ம் தேதி படம் ரிலீசாகிறது. நாளை பிரம்மாண்டமாக இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதையொட்டி இன்று சென்னை சாய்ராம் கல்லூரியில் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதில் படத்தின் கதாநாயகன் ஷாருக் கான் கலந்து கொள்கிறார். ஜவான் திரைப்படத்தில் தமிழ் இயக்குனர் மற்றும் தமிழ் நடிகர்கள் பட்டாளம் இருப்பதால் இந்த படத்துக்கு தமிழ்நாட்டிலும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் விநியோக உரிமை 16 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.