ஜவான் படத்தில் 6 ஸ்டண்ட் இயக்குனர்கள்!

Filed under: சினிமா |

தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் இத்திரைப்படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தமிழ் இயக்குனர் மற்றும் தமிழ் நடிகர்கள் பட்டாளம் இருப்பதால் இந்த படத்துக்கு தமிழ்நாட்டிலும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் விநியோக உரிமை 16 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஷாருக்கானின் படங்களிலேயே அதிக தொகைக்கு தமிழகத்தில் விற்கப்பட்ட படமாக ஜவான் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தில் 6 ஸ்டண்ட் இயக்குனர்கள் பணியாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 6 வெவ்வேறு விதமான சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ள இப்படத்தில் ஸ்பிரோ ரஸாடோஸ், யானிக் பென், கிரேக் மெக்ரே, கெச்சா காம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் அனல் அரசு ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.