நடிகை வேதிகாவின் சிறந்த டான்ஸ் வீடியோ- சமூகவலையத்தளத்தில் வைரல்!

Filed under: சினிமா |

நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் மதராசி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பிறகு முனி, காளை, சக்கரகட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும், பரதேசி மற்றும் காவியா தலைவன் ஆகிய படங்களின் மூலம் அவருடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இவர் இறுதியாக காஞ்சனா 3 படத்தில் நடித்துள்ளார்.

தற்போது வேதிகா நடனமாடும் ஒரு வீடியோவை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வளையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.