ஜிகே வாசனுக்கு இத்தனை தொகுதிகளா? குறிப்பா அந்த தொகுதிகள் மட்டும் தானா?

Filed under: அரசியல் |

ஜிகே வாசனுக்கு இத்தனை தொகுதிகளா? குறிப்பா அந்த தொகுதிகள் மட்டும் தானா?

தேர்தல் பிரச்சாரத்தைக் காட்டிலும் யாருக்கு எத்தனை சீட்டு என்ற தொகுதிப் பங்கீடே பெரியளவில் பேசப்படுகிறது. அதிமுகவிலும் சரி திமுகவிலும் சரி கூட்டணிக் கட்சிகளுடனான இழுபறி பொதுவானதாகவே இருக்கிறது. இருப்பினும், அதிமுக பாஜகவுக்கு 20 சீட்டுகளை ஒதுக்கி பெருஞ்சுமையை நேற்று இறக்கிவைத்துவிட்டது. முன்னதாக பாமகவுக்கு 23 சீட்டுகள் ஒதுக்கிவிட்டது.

பெரிய இழுபறியாகப் போய்க் கொண்டிருப்பது தமிழ்நாடு மாநில காங்கிரஸ் (தமாகா) கட்சியுடனான பேச்சுவார்த்தை தான். அக்கட்சித் தலைவர் ஜிகே வாசன் தனக்கு 12 சீட்டுகள் வேண்டுமெனவும், தனிச்சின்னமான சைக்கிளின் தான் போட்டியிடுவேன் எனவும் கூறிவந்தார். இது அதிமுக தரப்பில் மறுக்கப்பட்டது. இரண்டு சீட்டுகளுக்கு மேல் கொடுக்க முடியாது என எடப்பாடி அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டதாகத் தகவல் வெளியாகியது.


வாசன் தொடர்ந்து அழுத்திக் கேட்டதால் தற்போது மூன்று சீட்டுகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு, வால்பாறை ஆகிய தொகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னம் குறித்த தகவல் எதுவும் கூறப்படவில்லை. ஏற்கெனவே ராஜ்யசபா சீட்டு கொடுத்துவிட்டதால் அதைக் கேட்கவும் வாய்ப்பில்லை.