திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த முனியாண்டியின் மனைவி அம்பிகாபதி. இத்தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் சில வாரங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதனால், இத்தம்பதியரின் 17 வயது மகன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அதன்பின், ஆசிரியர்கள் இவரது பெற்றோருக்குத் தொடர்பு கொண்டு மாணவனை பள்ளிக்கு அனுப்பும்படி கூறியுள்ளனர். பின், பள்ளிக்குச் சென்ற அவரிடம் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியர்கள் கேட்டதற்கு, சில மாணவர்கள் தன்னைத் தாக்குவதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்தது, நாங்குநேரியில் வீட்டில் அந்த மாணவரும், அவரது தங்கையும் வீட்டிலிருந்தபோது இரவுல் 10.30 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. அருகில் இருந்தோர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், “தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.