படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்வது ஆபத்து – அமைச்சர் கடம்பூர் ராஜு!

Filed under: சினிமா |

படங்களை ஓடிடி மூலம் ரிலீஸ் செய்வது சினிமா தொழிலுக்கு ஆபத்தானது என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரிசோதனையில் எடுக்கப்படும் ரத்த சளி மாதிரிகளில் இருக்கும் ஆர்.என். ஏ மூலக்கூறுகளை பிரித்து எடுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.

தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸ் ஆய்வகதுக்கு 22 லட்சம் ரூபாய் செலவில் மாதிரிகளில் இருக்கும் ஆர்.என். ஏ மூலக்கூறுகளை பிரித்து எடுக்கும் கருவியை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆரம்பித்து வைத்தார்

பிறகு நிருபர்களிடம் பேசினார். அதில் அவர் கூறியதாவது: ஓடிடியில் படங்களை ரிலீஸ் செய்வது பற்றி தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவரும் சேர்ந்து ஆலோசனை நடத்திய பின்னர் அரசிடம் வந்ததால் அரச உதவி செய்யும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.