ஓபிஎஸ். ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தை போராட்டக் களமாக மாற்றி உள்ளனர். கடந்த சில நாட்களாகவே அதிமுக கட்சிக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்கதையாக மாறி உள்ளது.
அதிமுக கட்சியிக்கு ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி கூறி வருகிறது. தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணி அதை மறுத்து வருகிறது. நாளை நடக்கவிருக்கும் அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் இந்நியலையில் ஆதரவாளர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாறியுள்ளனர். இப்பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்கும்படி உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
ஒற்றைத் தலைமை முடிவை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நினைவிடத்தில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அங்கு “எடப்பாடியே துரோகத்தை நிறுத்து” என அவர்கள் கோஷமிடுகின்றனர். இப்போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொள்ளவாரா என்பது கட்சியினர் மத்தியில் கேள்விக் குறியாக உள்ளது.