“ஜெயிலர்” படத்தின் இசை வெளியீட்டு விழா?

Filed under: சினிமா |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம், “ஜெயிலர்.” வழக்கமாக ரஜினிகாந்த் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இத்திரைப்படத்துக்கு இல்லை. அதற்குக் காரணம் ரஜினிகாந்தின் வரிசையான முந்தைய தோல்வி படங்கள்தான். அதே போல படத்தை இயக்கும் நெல்சனின் கடைசி படமான “பீஸ்ட்” திரைப்படமும் தோல்விப்படமாக அமைந்தது.

“ஜெயிலர்” திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பலமொழி கலைஞர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படம் சுதந்திர தின விடுமுறையை ஒட்டி ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. இதுவரை படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. விரைவில் இத்திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது இது சம்மந்தமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இதுவரை ரஜினி, தன்னுடைய படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாக்களில் பேசியவற்றை இணைத்து உருவாக்கியுள்ளது. இதனால் விரைவில் “ஜெயிலர்” படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.