*புகழ்பெற்ற ‘யதார்த்த ஜோதிடர்’ ஷெல்வியின் இயற்பெயர் : தாமோதரன். இவர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்! தமிழ்நாட்டில் பி.ஜே.பி. கூட்டணிக்கு விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வை கொண்டுவந்தவர், இவர்தான்! தே.மு.தி.க.வின் அதிகாரப்பற்றற்ற தலைவரான பிரேமலதாவுக்கு, இவர்தான் ஆஸ்தான ஜோதிடர்!
இத்னைப் பெருமைகளுக்கு உரிய ஜோதிடர் ஷெல்லிதான், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 34 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் நம்மிடம் சொன்னார்!
அந்தத் தகவலை 4.4.2014 ல் வெளியான ‘நெற்றிக்கண்’ இதழில் பதிவு செய்திருந்தோம்!
* அ.தி.மு.க. 37 தொகுதிகளில் (3+7=10) வெற்றி பெற்றுவிட்டது என்பது, வேறு விஷயம்!