ஐந்து ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆழ்ந்த இரங்கல்!

Filed under: தமிழகம் |

சென்னை வியாசர்பாடி பகுதியில் 1973 ஆம் ஆண்டு ரூபாய் இரண்டுக்கு துவங்கி பின்பு ரூபாய் ஐந்து வரை மருத்துவ சிகிக்சை கொடுத்தவர் மருத்துவர் திருவேங்கடம். இவரை ஐந்து ரூபாய் மருத்துவர் என அழைத்து வந்தனர். உடல்நலக்குறைவால் நேற்று இரவு மருத்துவர் உயிரிழந்தார்.

மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது ஐந்து ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதை பற்றி அவருடைய ட்விட்டர் பதிவில்; 5 ரூபாய் டாக்டர் என அழைக்கப்பட்ட திரு. திருவேங்கடம் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மன வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.