பல முன்னணி நிறுவனங்களும் வேலைநீக்கம் செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் டிக்டாக் மட்டும் வேலைவாய்ப்பு செய்தியை அறிவித்துள்ளது.
உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், பேஸ்புக், டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன. பொருளாதார மந்தநிலை பணவீக்கம் மற்றும் அதிக செலவுகள் காரணமாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்பட்டதாக காரணங்கள் கூறப்பட்டன. டிக்டாக் நிறுவனம் 3,000 ஊழியர்களை பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பெரும்பாலான அமெரிக்க ஊழியர்களை வேலையில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகின் முன்னணி நிறுவனங்களில் வேலை பார்த்த ஊழியர்கள் தற்போது பிரச்சனையில் இருக்கும் நிலையில் அவர்களை நாங்கள் வேலைக்கு சேர்ப்போம் என்று டிக்டாக் நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.