டிடிவி தினகரனின் கருத்து!

Filed under: அரசியல்,தமிழகம் |

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திமுக ஆட்சியின் அவலங்களை மறைக்க ஆளுநர் விவகாரம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இன்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், “தமிழ்நாடு சட்டசபையில் நேற்று நடந்தது கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது என்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அது தவறுதான் என்று ஆளுநர் இந்த நடவடிக்கை வருத்தமளிக்கும் செயலாக உள்ளது. மத்திய அரசு ஆளுனரை திரும்பப் பெற்றால் மத்திய அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும். அதே நேரத்தில் அரசியல் தலைவராக முதலமைச்சர் செய்தது சரி இல்லை, திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதற்கும், ஊழலை மறைப்பதற்கும் ஆளுநர் விவகாரம் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.