டிடிவி தினகரன், “கனிமொழிக்கு பதவி கொடுத்ததற்கு பயம் ஒன்று தான் காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக பொதுக்குழுவில் சமீபத்தில் கூடியது. அதில் கனிமொழிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “கனிமொழி மீதான பயம் காரணத்தினால் அவருக்கு துணை பொது செயலாளர் பதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். அவருக்கு பதவி கொடுக்காவிட்டால் திமுக இரண்டாகி இருக்கும். தவறு செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனமாக இருக்கிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் “ஜெயலலிதா இப்போது அமைச்சராக இருந்தால் உடனடியாக தவறு செய்யும் அமைச்சர்களை நீக்கி இருப்பார்” என்று கூறியுள்ளார்.
Related posts:
கொரோனா அதிகமாக பாதித்த நாடுகள்: பட்டியலில் இந்தியா முன்னேற்றம்!
“தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை’’; பிரதமர் மோடி!
Election Updates: அதிமுக கூட்டணியில் பாஜக-வுக்கு 20 இடங்கள்; இடைத்தேர்தலில் ஆதரவு!' - கையெழுத்தானது ...
திருவல்லிக்கேணியில் குஷ்பு போட்டியிட்டாலும் உதயநிதிக்கே வெற்றி - சூரியன் உதிக்கும் தாமரை மலராதாமே!



