டிடிவி தினகரன் திமுக தமிழக மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து வருவருதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2019ம் ஆண்டு சீனாவிலிருந்து இந்தியாவில் கொரொனா பரவி தமிழகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டது. கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பரமரிக்கவும் செவிலியர்கள் கூடுதலாகத் தேவைப்பட்டனர். கடந்த 2021ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில் திமுக கட்சி, தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறினர். இன்னும் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யாதது குறித்து அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதுபற்றி, அவர் தனது டுவிட்டரில், “கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம்” என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, இப்போது ஒப்பந்த பணியைக்கூட நீட்டிக்க முடியாது என்று அவர்களை வீட்டிற்கு அனுப்பியிருக்கிறது. எத்தனையோ விஷயங்களில் தமிழக மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்துவரும் தி.மு.க அரசு, நெருக்கடியான நேரத்தில் தங்களது உயிரைத் துச்சமென நினைத்து பணியாற்றிய செவிலியர் பிரச்னையிலும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. இது ஆட்சியல்ல; எல்லா தரப்பினரையும் ஏமாற்றும் வெற்று நாடகக் காட்சி என்பதற்கு செவிலியர்களை பணிநீக்கம் செய்திருப்பது மற்றுமொரு சாட்சி!” என்று பதிவிட்டுள்ளார்.