டிரம்ப் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக நீக்கம் காரணம் என்ன?
வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் பேசினார்.அதிபர் டிரம்பின் பேச்சால் உணர்ச்சிவசப்பட்ட அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டனர்
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார் அதிபர் டிரம்ப். அதேபோல், டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.
இதனால் வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் அந்த வீடியோக்களை உடனடியாக நீக்கியது.
இந்நிலையில், வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் அதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது.